பாஜக ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று தொடங்கிய அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தென் தமிழக 28வது மாநில மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதை குறிப்பிட்ட மத்திய அமைச்சர், உலகின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.